4 ஆண்டுகளாக வேறொரு பெண்ணுடன் தொடர்பு, அதற்கு மறுக்கிறார்- கணவர் குறித்து ஷாக் தகவல் சொன்ன பிக்பாஸ் சம்யுக்தா
சம்யுக்தா ஷான்
விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் ஆனார் சம்யுக்தா.
அந்நிகழ்ச்சிக்கு பிறகு சம்யுக்தா, விஜய்யின் வாரிசு படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு படங்கள் பக்கம் அவரை காணவில்லை.
ஆனால் தனது இன்ஸ்டா பக்கத்தில் தொகுப்பாளினி பாவனாவுடன் செய்யும் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்ட வண்ணம் இருப்பார்.
லேட்டஸ்ட்டாக எடுக்கும் போட்டோ ஷுட் புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் வெளியிட்டு ஆக்டீவாக இருப்பார்.
ஏமாற்றிய கணவர்
இந்த நிலையில் நடிகை சம்யுக்தா தனது கணவர் குறித்து அவர் ஏமாற்றியது பற்றி பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், கணவர் கார்த்திக் துபாயில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அவர் வேறொரு பெண்ணுடன் வருஷமாக தொடர்பில் இருந்தது கொரோனா லாக்டவுன் சமயத்தில் தான் தெரியவந்தது.
![தொலைக்காட்சியில் பணிபுரியும் போது நடிகை நயன்தாராவிற்கு அதை செய்தேன்- இப்போது என்னை பார்த்தபோது, நடிகை ஓபன் டாக்](https://cdn.ibcstack.com/article/508d948f-8f5a-4490-9ae4-9596336392e8/24-65fe6e393e407-sm.webp)
தொலைக்காட்சியில் பணிபுரியும் போது நடிகை நயன்தாராவிற்கு அதை செய்தேன்- இப்போது என்னை பார்த்தபோது, நடிகை ஓபன் டாக்
கணவர் என்னைவிட்டு பிரிந்து சென்றதை தற்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கூறிய சம்யுக்தா அவர் ஏன் இப்படி செய்தார் என சில நேரம் யோசிப்பதாகவும் கூறி இருக்கிறார்.
மேலும் தன் மகன் அவ்வப்போது அப்பா எங்கனு கேட்கும்போது, அவர் வேலைல இருக்காரு, அவரால் இந்தியா வர முடியவில்லை என்று சொல்லிவிடுவேன் என எமோஷனலாக பேசி உள்ளார். அதோடு அவர் விவாகரத்து தரவும் மறுத்து வருவதாக சம்யுக்தா பேட்டியில் கூறியுள்ளார்.