பாலாஜி முருகதாஸ் என்னை பற்றி சொன்னது பொய்! வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட சனம் ஷெட்டி
பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் நேற்று போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கு Angel மற்றும் Demon யார் என இருவரை பற்றி சொல்ல வேண்டும் என சொல்லப்பட்டது. அந்த டாஸ்கில் பேசிய பாலாஜி முருகதாஸ் சனம் ஷெட்டியை தான் Demon என கூறினார்.
பெயர் மியூட் செய்யப்பட்டாலும் அவர் சனம் ஷெட்டி பற்றி தான் பேசுகிறார் என தெளிவாகவே தெரிந்தது. "நான் அந்த வார்த்தையை சொல்லவே இல்லை, ஆனால் என்னை பற்றி தவறாக பேசி என் பெயரை கெடுத்துவிட்டார். ஒருவரது கெரியரை அழித்து அதன் மூலமாக மேலே செல்ல நினைக்கிறார். அவருக்கு குற்ற உணர்ச்சியே இருக்காதா" என பாலாஜி கேட்டிருந்தார்.
முந்தைய சீசனில் நடந்த சம்பவம் பற்றி பாலாஜி இப்படி பேசியது வைரல் ஆனது. இந்த குற்றச்சாட்டு பற்றி சனம் ஷெட்டி ட்விட்டரில் வீடியோ உடன் பதிலடி கொடுத்து இருக்கிறார். பாலாஜி சொன்னதை அருகில் இருந்து கேட்ட ஆரி சாட்சிக்கு இருக்கிறார் என சனம் ஷெட்டி வீடியோ மூலமாக தெரிவித்து இருக்கிறார்.
"ஆதரவுக்கு நன்றி. சில போட்டியாளர்கள் என் மீது சுமத்தி இருக்கும் குற்றச்சாட்டுகள் பற்றி எனக்கு பல அழைப்புகள் வந்துவிட்டது. அவர்களது கேம் பாதிக்கக்கூடாது என சொல்லி நான் இதுவரை எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை. ஆனால் இன்று என் நேர்மையே கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது. என்ன நடந்தது என்பதற்கு ஆதாரம் இதோ" என குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டு இருக்கிறார் சனம்.
Thank u all for ur support.
— Sanam Shetty (@ungalsanam) February 22, 2022
Got many calls reg false allegations against me by few contestants. I didn't react till now as it might affect their game.
But today its a question of my integrity.
Here's a forwarded proof of what happened.
Nandri @Aariarujunan bro?#BBUltimate pic.twitter.com/UyKEss07zx