கண்ணு தெரியலையா, அந்த கேங்கை அதரிக்கிறீர்களா?.. பிக்பாஸ் 8 Host விஜய் சேதுபதிக்கு நடிகை சரமாரி கேள்வி

By Yathrika Dec 02, 2024 01:10 PM GMT
Report

பிக்பாஸ் 8

தொலைக்காட்சியோ, படமோ இப்போதெல்லாம் எந்த ஒரு விஷயம் செய்தாலும் அதற்கு விமர்சனம் செய்த அவ்வளவு பேர் வருகிறார்கள்.

அப்படி தான் விஜய் தொலைக்காடசியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 8 நிகழ்ச்சிக்கு விமர்சகர்கள் ஏராளமானோர் உள்ளார்கள். தற்போது கடந்த வாரம் விஜய் சேதுபதி இடம்பெற்ற எபிசோட் குறித்து தான் பரபரப்பாக விமர்சனம் எழுந்துள்ளது.

கண்ணு தெரியலையா, அந்த கேங்கை அதரிக்கிறீர்களா?.. பிக்பாஸ் 8 Host விஜய் சேதுபதிக்கு நடிகை சரமாரி கேள்வி | Sanam Shetty Criticises Vijay Sethupathi Hosting

சனம் ஷெட்டி

கடந்த வாரத்தில் மஞ்சரி மற்றும் அருண் பிரச்சனையில் விஜய் சேதுபதி அருணுக்கு ஆதரவாக மஞ்சரியை கடுமையாக சாடி இருந்தார்.

அதோடு மஞ்சரி தான் செய்த செயல் தவறு என்று மன்னிப்பு கேட்கவும் வைத்திருந்தார். ஆனால் மஞ்சரி இடம் அருண் ட்ரிகரின் போன்ற வார்த்தைகளை முதலில் பயன்படுத்தியது அருண் தான் என்ற ரகசியங்களை குறும்படம் வாயிலாக பல ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வந்தனர்.

இதுகுறித்து சனம் ஷெட்டி, பிக்பாஸ் நேற்றைய எபிசோட் ரசிகர்களை முழுமையாக ஏமாற்றியது. பாதிக்கப்பட்ட மஞ்சரியை இரக்கம் இன்றி அவமானப்படுத்துவது மற்றும் கொடுமைக்கப்படுத்துபவர்களை எப்படி பாராட்டுவது?

அடிப்படையில் விஜய் சேதுபதி செய்தது தவறு. அருணை பாராட்டுவதற்காக மஞ்சரியை நோஸ்கட் பண்ணினார்.

கருப்பு கண்ணாடி போட்டதால் அவருக்கு கண்ணு தெரியவில்லை. கண்ணு முன்னாடி அவ்ளோ பெரிய அநியாயம் நடக்கிறது, மஞ்சரியை மொத்த ஹவுஸ்மேட்டும் சேர்ந்து புல்லிங் பண்றாங்க, கார்னிங் பண்றாங்க ரவுடிசம் பண்றாங்க.

இதை தட்டிக் கேட்க உங்களுக்கு மனசு வரலையா சார்? என சரமாரி கேள்வி கேட்டுள்ளார். 

கண்ணு தெரியலையா, அந்த கேங்கை அதரிக்கிறீர்களா?.. பிக்பாஸ் 8 Host விஜய் சேதுபதிக்கு நடிகை சரமாரி கேள்வி | Sanam Shetty Criticises Vijay Sethupathi Hosting

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US