தம்பினு சொல்லிட்டு இப்படி பண்றது கேவலமா இருக்கு... பிக் பாஸ் ஷோவை விளாசிய நடிகை
பிக் பாஸ் 7ம் சீசன் தற்போது 29 நாட்களை கடந்து இருக்கிறது. நேற்று கமல் ஐந்து புதிய போட்டியாளர்களை பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பிய நிலையில் தற்போது போட்டி இன்னும் பரபரப்பாக மாறி இருக்கிறது.
ஆனால் அதே நேரத்தில் ஒரு சில போட்டியாளர்கள் செய்யும் விஷயங்கள் முகம்சுளிக்கவும் வைக்கிறது. ஐஷு மற்றும் நிக்சன் ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் முத்த விளையாட்டு விளையாடிய வீடியோ வெளியாகி இணையத்தில் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.
அதை பற்றி ஐஷுவின் பெற்றோர் கேட்டால், சேனல் தான் அப்படி பண்ண சொன்னாங்கனு சொல்லிடு என நிக்சன் பல திட்டங்களையும் போட்டு வருகிறார்.
கேவலமா இருக்கு..
தற்போது முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் சனம் ஷெட்டி பேசும்போது ஐஷுவை விளாசி இருக்கிறார். தம்பி தம்பி என சொல்லிவிட்டு இப்போது இப்படி செய்வது கேவலமாக இருக்கு என கூறி இருக்கிறார்.
அண்ணன் தம்பி உள்ளிட்ட உறவு முறைகளையே கேவலப்படுத்துவது போல இருக்கிறது என்றும் சனம் ஷெட்டி தாக்கி பேசி இருக்கிறார்.

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
