விஜய் சேதுபதி பட நடிகையின் படக்குழுவினருக்கு அபராதம் - காரணம் என்ன?
தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் படம் மூலம் பிரபலமானவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி.
இவர் தற்போது அழகிய கண்ணே எனும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சீனு ராமசாமியின் துணை இயக்குனர் விஜயகுமார் தான் இப்படத்தின் இயக்குகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கலில் உள்ள கிராமத்தில் நடந்து வருகிறது. இதில் கிராமத்து மக்களும் கலந்து கொள்ள 100கும் மேற்பட்டவர்களை கொண்டு படப்பிடிப்பு நடந்தது.
மேலும் கிராம மக்கள் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க கூடியிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொரோனா தடுப்பு குழுவினர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றனர்.
குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றாததால், படத்தின் குழுவினருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர் தடுப்பு பிரிவினர்.
இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.