விஜய் படத்தை மோசமாக விமர்சித்த பிரபல நடிகர் - கடுப்பான ரசிகர்கள்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் படம் உருவாகி வருகிறது.
தளபதி விஜய் எந்த அளவிற்கு ஹிட் படங்களை கொடுத்துள்ளாரோ, அதே போல் தோல்வி படங்களையும் கொடுத்துள்ளார்.
அப்படி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, மிகப்பெரிய தோல்வியடைந்த படம் சுறா. இப்படத்திற்கு பத்திரிகைகள் மத்தியில் பல தரப்பு விமர்சனங்கள் எழுந்தது.
இணையத்திலும் கசப்பான விமர்சனங்களை இப்படம் பெற்றது. இந்நிலையில் பிரபல நடிகர் சந்தீப் கிஷான், என்பவர் சுறா படத்தை மோசமாக விமர்சித்து டுவிட் ஒன்றை செய்துள்ளார்.
அதாவது, " சுறா படத்தை இப்போது தான் பார்த்தேன், மிகப்பெரிய தொல்லையாக இருந்தது. என் மூளைகளை வெளியேற்றுகிறது. இந்த கதையை விஜய் முதலில் கேட்ட போது, இப்படி தான் இருந்திருக்கும் " என்று 2010ஆம் ஆண்டு இந்த பதிவை செய்துள்ளார்.
இந்த டுவிட் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் பரவாலாக்கப்பட்டு வருகிறது.