அந்த பொண்ணு ஸ்லீவ்லெஸ் போடாது.. சாய் பல்லவி குறித்து இயக்குநருடன் கூறிய நபர்
சாய் பல்லவி
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியான சாய் பல்லவி கடந்த ஆண்டு அமரன் படத்தின் மூலம் ஹிட் கொடுத்தார்.
இதை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள தண்டேல் திரைப்படம் வருகிற 7ம் தேதி வெளிவரவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா கலந்துகொண்டார்.
சந்தீப் ரெட்டி வங்கா
அப்போது மேடையில் பேசிய அவர், தனது அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் சாய் பல்லவியை நடிக்க வைக்க முயன்றதாக கூறியுள்ளார்.
இதில், "அர்ஜுன் ரெட்டி படத்திலேயே சாய் பல்லவியை கதாநாயகியாக்க முயன்றேன். இதுகுறித்து co ordinator ஒருவரிடம் பேசினேன். தனது கதையை கேட்ட அந்த co ordinator, சாய் பல்லவியா அந்த பெண் ஸ்லீவ்லெஸ்ஸே போடாது, இந்த கதைக்கு அவர் செட்டாக மாட்டார் என கூறினாராம். இதனால்தான் சாய் பல்லவியை அர்ஜுன் ரெட்டி படத்தில் நாயகியாக்கும் முடிவை மாற்றி கொண்டேன்" என சந்தீப் ரெட்டி வங்கா கூறினார்.
இந்த தகவல் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.