பிரஜினுக்காக கதறிய சான்ட்ரா.. மோசமான உடல்நிலை, மருத்துவர்கள் சிகிச்சை
பிக் பாஸ் 9 வீட்டில் இன்று நடந்த எலிமினேஷன் கொஞ்சம் வித்தியாசமாக செய்யப்பட்டது. நாமினேஷன் லிஸ்டில் கடைசியில் இருந்த பிரஜின் மற்றும் கெமி என இருவரையும் தனித்தனி காரில் ஏற்றி அனுப்ப வேண்டும்.
அதில் ஒரு கார் மட்டுமே மீண்டும் உள்ளே வரும் என சொல்லப்பட்டது. பிரஜின் ஏறி செல்லும்போது சாண்ட்ரா கதறி கதறி அழ தொடங்கிவிட்டார். அவரை மற்றவர்கள் தடுத்தார்கள். ஆனாலும் அவர் அழுதுகொண்டே இருந்தார்.

மயங்கி விழுந்த சாண்ட்ரா
கெமி எலிமினேட் ஆன நிலையில் பிரஜின் மீண்டும் வீட்டுக்குள் வந்தார். அவர் சாண்ட்ராவிடம் வந்து பேசியபோது அவர் மயங்கி விழுந்துவிட்டார்.
அதன் பின் அவரை டாக்டர்களிடம் அனுப்பி சிகிச்சை பெற வைக்கின்றனர். அதன் பின் நீண்ட நேரம் கழித்து தான் சான்ட்ரா வீட்டுக்குள் வந்தார்.
அவரிடம் பேசிய விஜய் சேதுபதி "நீங்க strong ஆன ஆளா, இல்லை weak ஆனவரா. இரண்டு மாதிரியும் இருக்கீங்களே" என விமர்சித்தார். சிகிச்சைக்கு பிறகு தான் சான்ட்ரா சகஜமானார்.
