லோகா பட வில்லன் சாண்டி தமிழில் நடிக்கும் புதிய 'சூப்பர் ஹீரோ' படம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சாண்டி மாஸ்டர்
2025ஆம் ஆண்டு மலையாள திரையுலகில் வெளிவந்து இண்டஸ்ட்ரி ஹிட் ஆகியுள்ள படம் லோகா. இப்படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார் சாண்டி மாஸ்டர்.

இதற்கு முன் லியோ படத்தில் கூட இவருடைய மிரட்டலான நடிப்பு அனைவருக்கும் பிடித்திருந்தது. இந்த நிலையில், சாண்டி நடிக்கும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
சூப்பர்ஹீரோ
விக்னேஷ் வேணுகோபால் இயக்கத்தில் SoldiersFactory தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் அர்ஜுன் தாஸ், சாண்டி மற்றும் நடிகை தேஜு அஸ்வினி இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்திற்கு 'சூப்பர்ஹீரோ' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அதே தயாரிப்பு நிறுவனம் நிஞ்ஜா என்கிற படத்தையும் தயாரிக்கிறது. இந்த இரண்டு படங்களின் அறிவிப்பு விழா இன்று காலை பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு, பா. ரஞ்சித், நெல்சன், கவின், ஆர்யா என பல திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.
சூப்பர் ஹீரோ படத்தின் டைட்டில் லுக் இதோ:

நிஞ்ஜா படத்தின் டைட்டில் லுக்:
