கல்யாணத்துக்கு முன்பே அந்த விஷயத்தை கூறினேன், அதற்கு கிங்ஸ்லி- சீரியல் நடிகை சங்கீதா ஓபன் டாக்
நடிகை சங்கீதா
தமிழ் சின்னத்திரையில் யார் நடிக்கிறார்கள், எந்த தொடர் என்பதை ஒரு பிரபலத்தை பார்த்ததுமே மக்கள் கூறிவிடுவார்கள்.
அந்த அளவிற்கு சின்னத்திரை மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. அப்படி சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகை சங்கீதா.
இவர் சமீபத்தில் செய்த ஒரு விஷயத்தால் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டார். அதாவது அவர் நடிகர் கிங்ஸ்லியை மைசூரில் மிகவும் சிம்பிளாக மறுமணம் செய்துகொண்டார்.
நடிகையின் பேட்டி
நடிகர் கிங்ஸ்லி மற்றும் சங்கீதாவின் திருமணம் குறித்து நிறைய விமர்சனங்கள் வந்தன, அதேசமயம் பலரும் மனம் ஒத்துப்போனால் யாரை திருமணம் செய்தால் என்ன வாழ்த்துக்கள் என கமெண்ட் செய்து வந்தனர்.
இந்த நிலையில் சீரியல் நடிகை சங்கீதா ஒரு பேட்டியில், எங்களது திருமணத்துக்கு முன்பே நான் எனது கணவரிடம், எனக்கு சமையல் தெரியாது. வீட்டை ஒழுங்காக நிர்வாகம் பண்ண தெரியாது, ஜாலியா சேர்ந்து ஊர் சுத்தலாம் என்று கூறினேன்.
அதற்கு அவர் ஓகே சொல்லிவிட்டார். இதற்கு மட்டும் இல்லை நான் எது கேட்டாலும், சொன்னாலும் சரி என்றுதான் சொல்வார் என தனது கணவர் குறித்து பெருமையாக கூறியுள்ளார்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
