நடிகர் ராஜ்கிரணால் தினமும் அழுதுகொண்டே இருந்தேன்- காரணம், நடிகை சங்கீதா ஓபன் டாக்
நடிகை சங்கீதா
நடிகை சங்கீதா, குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி கதாநாயகியாக சில திரைப்படங்களில் நடித்து பலரின் மனதை கொள்ளை கொண்டவர் தான் சங்கீதா.
என் ரத்தத்தின் ரத்தமே என்ற படத்தின் மூலம் தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்து தனது பயணத்தை தொடங்கியவர் சாமுண்டி, தாலாட்டு, சரிகமபதநி, எல்லாமே என் ராசாதான், புள்ள குட்டிக்காரன், சீதனம், பூவே உனக்காக, காலம் மாறி போச்சு, அலெக்சாண்டர், கங்கா கௌரி என பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.
நடிகையின் பேட்டி
நான் 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது எல்லாமே என் ராசா படத்தில் கரடு முரடான தோற்றத்தில் இருப்பவருக்கு ஜோடியாக நடித்தேன்.
ராஜ்கிரண் சார் தான் எனக்கு ஜோடி, அந்த படத்தில் பெரிய பொண்ணு போல இருக்க வேண்டும் என்பதற்காக நான் கொஞ்சம் வெயிட் போட்ட பிறகு படப்பிடிப்பு துவங்க வேண்டும் என்றார்கள்.
அதனால் தினமும் ராஜ்கிரண் சார் அவர்களின் ஆலீஸில் இருந்து வாழைப்பழம், சாப்பாடு, ஐஸ்கிரீம், தயிர் என விதவிதமாக வரும். ஐஸ்கிரீம் வேண்டுமென்றால் நாம சாப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால் சாப்பாட்டை கொஞ்சமாதான சாப்பிட முடியும்.
ஆனால் அவர்கள் கண்டிப்பா அதிகமா சாப்பிடணும்னு கட்டாயப்படுத்தினாங்க. இதனால் சாப்பிட நான் மிகவும் கஷ்டப்பட்டு அழுதுகொண்டே சாப்பிட்டேன் என கூறியுள்ளார்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
