நடிகர் விஜய்யின் மாமனார், மாமியாரை பார்த்துள்ளீர்களா.. குடும்ப புகைப்படம் இதோ

Kathick
in பிரபலங்கள்Report this article
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதை தொடர்ந்து தளபதி 69 உருவாகவுள்ளது. ஹெச். வினோத் இப்படத்தை இயக்குகிறார் என கூறப்படும் நிலையில், கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இவை எதற்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
விஜய்யின் மாமனார், மாமியார்
விஜய்க்கு கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. உறவினர்கள் சூழ், விஜய் - சங்கீதாவின் திருமணம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இந்த தம்பதிக்கு சஞ்சய் மற்றும் திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளதை அறிவோம்.
இந்த நிலையில், விஜய்யின் மனைவி சங்கீதாவின் தாய், தந்தை அதாவது விஜய்யின் மாமனார் மற்றும் மாமியாரை ரசிகர்கள் பலரும் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. அவர்களுடைய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..