நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் சொத்து மதிப்பு மட்டுமே எவ்வளவு தெரியுமா?
நடிகர் விஜய்
நடிகர் விஜய், தமிழ் சினிமா தலையில் வைத்து கொண்டாடும் ஒரு பிரபலம்.
இவரது நடிப்பில் கடைசியாக ஜனநாயகன் திரைப்படம் வெளியாகவுள்ளது, இப்படம் அரசியல் கதைக்களத்தை மையமாக கொண்டதாம்.
இப்பட படப்பிடிப்பை முழுவதும் முடித்த விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநாடு மதுரையில் படு பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் விஜய் பேசியது மிகவும் வைரலானது.
மாநாடு மேடையில் விஜய் எடுத்த வீடியோவும் சமூக வலைதளங்களில் செம வைரலானது.
சொத்து மதிப்பு
கடந்த சில வருடங்களாக விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்ற வதந்தி வலம் வந்த வண்ணம் இருந்தது.
ஆனால் உண்மை என்னவென்றால் தனது மகள் படிப்பிற்காக சங்கீதா வெளிநாட்டில் தங்கி இருக்கிறார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சங்கீதாவின் சொத்து மதிப்பு விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
இலங்கையை பிறப்பிடமாக கொண்ட லண்டன் தொழிலதிபரின் மகளான சங்கீதா, விஜய்யின் தீவிர ரசிகை.
இருவரின் நட்பு காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது. சங்கீதாவின் சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 400 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.