விவாகரத்து வழக்கில் மீண்டும் நீதிமன்றத்திற்கு சென்ற சங்கீதா... விஜய் இப்படி செய்தாரா?
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் முன்னணி நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்கள் வட்டாரத்தை தமிழகத்தில் மட்டும் இல்லை ஆந்திரா, கேரளா, கர்நாடகா என எல்லா இடத்திலும் ரசிகர்கள் உள்ளார்கள்.
சினிமா மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டவர் இப்போது அந்த சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார், அந்த செய்தி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தாலும் அவர் வேறு களத்தில் இறங்கியுள்ளார் என்பதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகம் என துவங்கி அதில் தனது முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.
விவாகரத்து
விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் இன்னும் ரிலீஸ் ஆகவே இல்லை, அரசியலில் ஏகப்பட்ட பிரச்சனைகளை சநதிக்கிறார்.
இந்த நிலையில் தான் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் நிறைய பேசப்பட்டது.

விவாகரத்து வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளார் சங்கீதா. அதில் பிரிட்டன் குடியுரிமையுடன் லண்டனில் வசித்து வருவதால் சென்னையில் எனக்கு தனியாக வீடு இல்லை.
விவாகரத்து கோரியுள்ளதால் தற்போது சென்னையில் வீடு இல்லாமல் தவிக்கிறேன், என்னை வீட்டிற்குள் அனுமதிக்க விஜய் மறுக்கிறார்.

விவாகரத்திற்கு பிறகு வேறு வீட்டிற்கு செல்லும் வரை நீலாங்கரை வீட்டில் தங்க விஜய் தன்னை அனுமதிக்க உத்தரவிடக் கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கீதா புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri