விஜய் படத்தில் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டேன்!! இளம் நடிகை சஞ்சனா சாரதி பேட்டி
சஞ்சனா சாரதி
2012 ஆம் ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த துப்பாக்கி திரைப்படத்தில் விஜய்யின் சகோதரியாக சிறிய பாத்திரத்தில் அவர் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை சஞ்சனா சாரதி.
இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
பேட்டி
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை சஞ்சனா சாரதி விஜய் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், "நான் அந்த படத்தின் பெயர் குறிப்பிட விரும்பவில்லை. இன்னொரு விஜய் சார் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. அந்த படத்திலும் விஜய் சாருக்கு தங்கையாக நடிக்க கூப்பிட்டாங்க".
"அந்த ரோல் அவருடன் ரொம்ப கம்மி screen டைம் இருந்தது. அதனால் நான் வேண்டாம்னு சொல்லிட்டேன். எனக்கு நல்ல கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரோலில் நடிக்க வேண்டும் என்று ஆசை".
"இதற்கு முன்பு விஜய் சாருக்கு தங்கையாக நடித்துவிட்டேன். திரும்ப திரும்ப இப்படி நடித்துக்கொண்டு இருந்தால் நம்மை அந்த ரோலுக்கு brand பண்ணிருவாங்க. இது தான் காரணம்" என்று சஞ்சனா சாரதி தெரிவித்து உள்ளார்.