விடாமுயற்சி படத்தில் நடிக்கிறாரா அந்த பாலிவுட் நடிகர்..அஜித்துடன் எடுத்து கொண்ட புகைப்படம் வைரல்
மகிழ்திருமேனி
மீகாமன், தடம், கலகத்தலைவன் போன்ற பல படங்களை இயக்கியவர் தான் மகிழ்திருமேனி. இவர் அஜித்தின் 62 படத்தை இயக்கவுள்ளார்.
இப்படத்திற்கு விடாமுயற்சி என்று தலைப்பு வைத்துள்ளனர். ஆனால் இப்படத்திற்கான ஷூட்டிங்கில் எந்த ஒரு முயற்சியையும் படக்குழு செய்யவில்லை என்று ரசிகர்கள் ஒருபக்கம் ட்ரோல் செய்து வருகின்றனர்.
தற்போது விடாமுயற்சி படத்தில் சஞ்சய்தத், அர்ஜூன் தாஸ், த்ரிஷா எனப் பல பிரபலங்களின் பெயர் பரிசீலனையில் உள்ளன.

புகைப்படம் வைரல்
இந்நிலையில் அஜித் குமார் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உடன் துபையில் எடுத்து கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதனால் விடாமுயற்சி படத்தில் சஞ்சய் தத் அஜித்துடன் நடிக்க போகிறாரா என்று ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது.

விஜய் ஆண்டனி யின் மகள் இறப்பால் விஜய் எடுத்த அதிரடி முடிவு!..என்ன தெரியுமா?
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri