என் மகன் லோகேஷ் கனகராஜ்.. உருகிய லியோ வில்லன்
லோகேஷ் கனகராஜ்
தமிழ் சினிமாவின் சென்சேஷன் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார்.
மாபெரும் எதிர்பார்ப்புக்குரிய படமான லியோ கண்டிப்பாக வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, கைதி படத்தின் மூலம் முன்னணி இயக்குனராக முத்திரை பதித்து, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து தோல்வியை காணாத இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு இன்று பிறந்தநாள்.
தன்னுடைய இந்த வருட பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் லியோ படக்குழுவுடன் கொண்டாடியுள்ளனர் லோகேஷ். நேற்று இரவு கூட கோலாகலமாக பார்ட்டி நடைபெற்றுள்ளது.
பிறந்தநாள் வாழ்த்து
இந்நிலையில், லியோ படத்தின் வில்லன் நடிகர் சஞ்சய் தத், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு, என்னுடைய சகோதரனே, மகனே மற்றும் என் குடும்பத்தில் ஒருவர் லோகேஷ் கனகராஜுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.
Happy birthday my brother, son, family @Dir_Lokesh, may God give you more success, peace, happiness and wealth, I am always with you for life, stay blessed. Love you! pic.twitter.com/9OW5Cj4pZo
— Sanjay Dutt (@duttsanjay) March 14, 2023