நண்பராக இருந்தும் விஜய் பட வாய்ப்புகள் வாங்கி கொடுக்காதது ஏன்- சஞ்சீவே கூறிய தகவல்

vijay biggboss5 bb5 sanjeevvenkat
By Yathrika Dec 24, 2021 06:20 AM GMT
Report

இளைய தளபதி விஜய் இப்போது உள்ள இளைஞர்களை கூட கட்டிப்போட்டு வைத்திருப்பவர். 

பஞ்ச் வசனங்கள், நடனம், ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் என எல்லாவற்றிலும் ஒரு ரவுண்ட் வந்திருக்கிறார். தளபதியுடன் கல்லூரியில் படித்த நண்பர்கள் பலர் இப்போதும் அதிகம் டச்சில் உள்ளார்கள்.

அதில் சிலர் விஜய்யுடன் சினிமாவில் நடித்துள்ளார். அப்படி விஜய்யின் நண்பராக சஞ்சீவை மக்களுக்கு அதிகம் தெரியும்.

இப்போது சஞ்சீவ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார், விஜய் நிகழ்ச்சியை பார்த்து அவர் நன்றாக விளையாடி வருவதாக அவரது மனைவியிடமும் கூறியிருக்கிறார்.

சஞ்சீவிடம் ஒரு பேட்டியில் விஜய் உங்களது நண்பராக இருந்தும் பட வாய்ப்பு வாங்கி கொடுக்காதது ஏன் என கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு சஞ்சீவ், அதாவது எங்களது நட்புக்குள் ஒரு பாலிசி இருக்கிறது.

சொந்த பிரச்சனையாக இருந்தால் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வோம். ஆனால் தொழில் ரீதியாக யாரும் யாரிடமும் எந்தவித உதவியையும் கேட்கக் கூடாது என்பதுதான் அந்த பாலிசி.

உன்னோட வேலையை நீ பாரு என்னோட வேலையை நான் பார்க்கிறேன் என்று தான் இருப்போம். ஆனால் பர்சனலாக ஏதாவது பிரச்சனை என்றால் அந்த விஷயம் தெரிந்த உடனே ஓடி வந்து உதவிடுவார் விஜய் என சஞ்சீவ் கூறியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US