ஏன் சினிமாவ விட்டு போறன்னு விஜய்கிட்ட கேட்டேன்.. அவர் சொன்ன பதில்: சஞ்சீவ் பேட்டி
நடிகர் விஜய் தீவிர அரசியலில் களமிறங்க திட்டமிட்டு தவெக என்ற கட்சியை தொடங்கி இருக்கிறார். 2026 தேர்தலில் போட்டியிட இருப்பதால் அதற்கு முன் ஒப்புக்கொண்ட படங்களை முடித்துக்கொடுத்துவிட்டு சினிமாவில் இருந்து முழுமையாக விலக இருக்கிறார்.
தொடர்ந்து நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்களும் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். இருப்பினும் விஜய் அரசியலில் தற்போது இருந்தே தீவிரம் காட்ட தொடங்கிவிட்டார். சமீபத்தில் நடந்த கள்ளச்சாராய சம்பவத்திலேயே அதை பார்தோம். அவர் நேரடியாக மருத்துவமனை சென்று அனைவரையும் பார்த்து இருந்தார்.
சஞ்சீவ் பேட்டி
இந்நிலையில் நடிகர் சஞ்சீவ் அளித்த பேட்டியில் விஜய் சினிமாவில் இருந்து விலகுவது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் தானே விஜய்யிடம் அதை பற்றி நேரடியாக கேட்டதாகவும், அதற்க்கு சொன்ன பதில் இதுதான் என்றும் கூறி இருக்கிறார்.
"கேள்விபட்டியா.. அப்போ அதுதான் உண்மை" என ஒரே வரியில் விஜய் கூறிவிட்டாராம். சஞ்சீவ் விஜய் பற்றி பேசிய முழு வீடியோ இதோ.

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
