புதிய சீரியலில் கமிட்டான நடிகர் சஞ்சீவ்- விஜய் டிவி கிடையாது, எந்த தொலைக்காட்சி தெரியுமா?
விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற சீரியல் மூலம் தமிழ் மக்களுக்கு பரீட்சயமானவர் சஞ்சீவ். இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த ஆல்யா மானசா என்ற நடிகையை காதலித்து திருமணமும் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தையும் உள்ளார். புதிதாக ஒரு யூடியூப் பக்கம் ஆரம்பித்து அதில் நிறைய வீடியோக்களை பதிவிட்டும் வருகிறார்கள்.
ஆல்யா மானசா ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார். சஞ்சீவ் நடித்துவந்த காற்றின் மொழி சீரியலும் முடிந்துபோக அவர் அடுத்து எந்த சீரியலில் நடிப்பார் என பெரிய கேள்வி ரசிகர்களிடம் இருந்தது.
இந்த நிலையில் நடிகர் சஞ்சீவ் 7.30 PM பிரைம் டைமில் சன் தொலைக்காட்சியில் புதிய சீரியல் நடிக்கிறார் என்பது மட்டும் தகவல் வந்துள்ளது. மற்றபடி சீரியல் குறித்த எந்த தகவலும் இல்லை.