பிக்பாஸில் இருந்து வெளியேறிய சஞ்சீவ் யாரை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார் தெரியுமா?- செம போட்டோ
பிக்பாஸ் 5வது சீசனில் போட்டி போட்டவர்களில் மக்களை அதிகம் கவர்ந்தவர் யார் என்று குறிப்பிட்டு கூறவே முடியவில்லை.
நிகழ்ச்சியும் முடியை எட்டிவிட்டது, யார் பிக்பாஸ் 5வது சீசனின் வெற்றியாளர் என்பது சில தினங்களில் தெரிந்துவிடும். இன்று காலை புதிய புரொமோ ஒன்று வந்தது.
அதில் பிக்பாஸ் போட்டியாளர்களை Open Nomination செய்யக் கூறுகிறார்.
ஒவ்வொருவரும் தைரியமாக நாமினேஷன் செய்கிறார்கள், இதில் யார் அதிகம் நாமினேஷனில் வந்துள்ளார் என்று இன்று தெரிந்துவிடும்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து கடைசியாக வெளியேறி இருந்தவர் சஞ்சீவ் வெங்கட். இவர் நிகழ்ச்சி முடிந்து வீட்டைவிட்டு வெளியேறிய கையோடு வருண் மற்றும் அக்ஷாராவை சந்தித்துள்ளார்.
அவர்கள் 3 பேரும் எடுத்த புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.