விஜய் மனைவி சங்கீதா தான் சமைப்பாங்க, வகை வகையா சாப்பாடு இருக்கும்.. சஞ்சிவ், ப்ரீத்தி ஓபன் டாக்
விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவருடைய நடிப்பில் தற்போது ஜனநாயகன் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இது, விஜய்யின் கடைசி திரைப்படம் ஆகும். அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால் முழுமையாக சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
மேலும் ஸ்ருதி ஹாசன் கேமியோ ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாள் அன்று, ஜனநாயகன் படத்தில் இருந்து கிலிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர். அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் சஞ்சீவ் வெங்கட். இவர் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராவார். இவருடைய மனைவி ப்ரீத்தியும் சின்னத்திரை நடிகை ஆவார். விஜய்யின் வீட்டிற்கு அருகேதான் சஞ்சீவ் வீடும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சஞ்சீவ் - ப்ரீத்தி
இந்த நிலையில், விஜய்யின் வீட்டிற்கு அடிக்கடி சாப்பிட செல்வது குறித்து சஞ்சீவ் மற்றும் ப்ரீத்தி இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.
இதில் "அடிக்கடி மீட் பண்றது விஜய் வீட்ல, அங்க போனா வகை வகையா சாப்பாடு இருக்கும். அவர் சமைக்க மாட்டார், அவர் மனைவி சங்கீதா இருப்பாங்க, அவங்க நல்ல சமைப்பாங்க" என கூறியுள்ளனர். மேலும் விஜய்க்கு என்ன வகையான உணவு மிகவும் என அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினி கேள்வி கேட்க, "விஜய்க்கு மட்டன் பிரியாணி ரொம்ப புடிக்கும்" என சஞ்சீவ் கூறியுள்ளார்.