கயல் சீரியலில் இருந்து எப்போதோ விலகிய சஞ்சீவ், கிளைமேக்ஸில் Ai காட்சிகள்... ரசிகர்கள் ஷாக்
கயல் சீரியல்
ஒரு பெண்ணால் எல்லாம் சாதிக்க முடியும் என்பதை காட்டும் வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் கயல். சஞ்சீவ் மற்றும் சைத்ரா ரெட்டி முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்க பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வந்தது.
கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் 2026, அக்டோபர் 24 முடிவுக்கு வந்துவிட்டது. சுமார் 1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிய இந்த சீரியல் அதிகம் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5ல் இருந்து வந்தது.
இந்த சீரியலில் மகா சங்கமங்கள், ஒரு மணி நேரம் ஒளிபரப்பு, ஞாயிறுக்கிழமைகளில் ஒளிபரப்பானது என நிறைய நடந்துள்ளது.

ஏஐ வீடியோ
இந்த தொடரில் எழிலாக நடித்து வந்தவர் தான் சஞ்சீவ். இவருக்கு கதையில் சில வாரங்களுக்கு முன் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது போல் காட்டப்பட்டது.
அதன்பின் எழிலின் காட்சிகள் இடம்பெறவில்லை. தற்போது கதை கிளைமேக்ஸ் எட்டியுள்ள நிலையில் எழில்-கயல் சந்தோஷமாக இணைவது போல் காட்டுவார்கள் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள்.

நேற்று ஒளிபரப்பான எபிசோடில் எழிலின் காட்சிகள் வந்தன, ஆனால் அது ஏஐ வீடியோ. இதைப்பார்த்த ரசிகர்கள் கடைசி நேரத்தில் என்ன ஆனது, ஏன் அவரை நடிக்க வைக்கவில்லை என பல கேள்விகள் எழுப்பி வருகிறார்கள்.