ஆரம்பமே சீரியல் நடிகர் சஞ்சீவிற்கு ஏற்பட்ட சோகம்- அதற்குள் இப்படியா, என்ன ஆனது?
நடிகர் சஞ்சீவ்
இவரது பெயரை கூறியதுமே முதலில் நடிகர் விஜய்யின் நண்பர் என்பது தான் ரசிகர்களுக்கு முதலில் நியாபகம் வரும்.
இவர் சின்னத்திரையில் திருமதி செல்வம், யாரடி நீ மோகினி என வெற்றிகரமான தொடர்களில் நாயகனாக நடித்து தனக்கு என்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.
கடைசியாக இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் Wild Card என்ட்ரீயாக நுழைந்து சில நாட்களிலேயே வெளியேறிவிட்டார்.

திடீர் மாற்றம்
இவர் ராதிகா சரத்குமாரின் ராடன் நிறுவன தயாரிப்பில் கிழக்கு வாசல் என்ற தொடரில் நாயகனாக நடிக்க கமிட்டாகி இருந்தார். சீரியலின் பூஜையும் அண்மையில் போடப்பட்டது, இதில் ரேஷ்மா நாயகியாக நடிக்க இருக்கிறார்.
இவர்களை தாண்டி விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது என்னவென்றால் இன்னும் ஒளிபரப்பப்படாத இந்த தொடரில் இருந்து சஞ்சீவ் விலகிவிட்டாராம், என்ன காரணம் என்பது தெரியவில்லை.
அவருக்கு பதில் யார் நடிக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.
முந்தானை முடிச்சு படத்தில் கிளாமராக நடித்த டீச்சரா இது?- பேரன் குழந்தைகளுடன் அவரின் குடும்ப போட்டோ
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri