சீரியலை தாண்டி மீண்டும் பழைய ரூட்டிற்கு மாறிய சஞ்சீவ் வெங்கட்... என்ன விஷயம் தெரியுமா?
சின்னத்திரை
தமிழ் சினிமா என்னங்க அது ஒருபக்கம் இருக்கட்டும், இப்போது சின்னத்திரை தான் எங்க ஃபஸ்ட் சாய்ஸ் என மக்கள் அனைவரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இந்த பொங்கலுக்கு சன், விஜய், ஜீ தமிழில் ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பானது. இடையில் வழக்கம் போல சீரியல்களும் ஒளிபரப்பானது, பொங்கலும் முடிந்துவிட்டது.
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான எல்லா ரியாலிட்டி ஷோக்களின் டிஆர்பியை காண தான் ரசிகர்களும் மிகவும் ஆவலாக உள்ளனர்.

சஞ்சீவ் வெங்கட்
பொங்கல் ஸ்பெஷலை முடிந்த கையோடு இப்போது எல்லா தொலைக்காட்சியில் புதிய சீரியல்களின் வரவு உள்ளது.
இந்த நேரத்தில் ஜீ தமிழில் விரைவில் வரப்போகும் புதிய ரியாலிட்டி ஷோ குறித்த தகவல் வந்துள்ளது. அதாவது கில்லாடி ஜோடிஸ் என்ற பெயரில் புதிய ஷோ களமிறங்கப்போகிறது.
அந்த ஷோவை பிரபல சீரியல் நடிகர் சஞ்சீவ் வெங்கட் தான் தொகுத்து வழங்க உள்ளாராம். சீரியல்களில் நடித்து வந்தவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொகுப்பாளராக கலக்க உள்ளார்.