ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ரிலீஸ்.. எப்போது தெரியுமா?
டிடி நெக்ஸ்ட் லெவல்
சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வடக்குப்பட்டி ராமசாமி மற்றும் இங்க நான் தான் கிங்கு ஆகிய இரண்டு திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதை தொடர்ந்து, கடந்த ஆண்டு சந்தானம் நடித்து வெளிவந்த DD Returns திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதை நாம் அறிவோம். இதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது என முன்பு அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இரண்டாம் பாகமான டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்நிலையில், இந்த படத்திற்கான பின்னணி வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
எப்போது தெரியுமா?
இந்நிலையில் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவலை தனது ட்விட்டர் பக்கம் மூலம் சந்தானம் தெரிவித்துள்ளார். அதன்படி, இப்படம் மே மாதம் 16-ந் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது.