நீண்ட நாள் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட சந்தானத்தின் படம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ்.. எப்போது தெரியுமா
தமிழ் சினிமாவில், நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, அதன்பின் ஹீரோவானவர் நடிகர் சந்தானம்.
இவர் நடிப்பில் உருவான பல திரைப்படங்கள், கொரோனா தாக்கம் காரணமாக தற்போது வரை ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.
அதில், நீண்ட நாட்களாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் படம் என்றால், அது டிக்கிலோனா, தான். கார்த்திக் யோகி இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இப்படம் நேரடியாக ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆம், வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி, சந்தானத்தின் டிக்கிலோனா திரைப்படம் நேரடியாக ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்த தகவலை அறிந்த, நடிகர் சந்தானத்தின் ரசிகர்கள் பலரும், சந்தோஷத்தில் உள்ளனர்.
Official: Santhanam's #Dikkilona premiering directly on Zee5 premium, September 10th. pic.twitter.com/TEZ9IUKAGo
— LetsOTT GLOBAL (@LetsOTT) August 18, 2021