ரசிகர் கேட்டதற்காக இதுவரை நாம் பார்த்திராத புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் சந்தானம்- செம போட்டோ
தமிழ் சினிமாவில் கவுண்டமணி-செந்தில், வடிவேலு, விவேக் தொடர்ந்து ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர் நடிகர் சந்தானம்.
தொடர்ந்து எல்லா படங்களிலும் நடித்து வந்தார். எந்த ஒரு புதிய படம் என்றாலும் இவர் இல்லாமல் இருக்க மாட்டார், அப்படி ஒரு மார்க்கெட் இவருக்கு இருந்தது. பட வாய்ப்புகள் வந்துகொண்டே இருந்த நேரத்தில் இனி காமெடியன் இல்லை ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என முடிவு எடுத்தார்.
அப்படி அவர் நாயகனாக நடித்த படங்களும் நல்ல ஹிட் வரிசையில் அமைந்தது. இப்போதும் தொடர்ந்து நடித்துவரும் அவர் அண்மையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
அப்போது ஒரு ரசிகர் நடிகர் சந்தானத்தின் சிறுவயது புகைப்படம் கேட்க அவரும் ஷேர் செய்துள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் அட நமது சாண்டாவா இது என ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.
