சந்தானம்
நகைச்சுவை நடிகராக சினிமாவில் அறிமுகமாகி மக்கள் மனத்தில் இடம்பிடித்தவர் சந்தானம். விஜய், அஜித், ரஜினி, தனுஷ், சிம்பு என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
ஒரு கட்டத்தில் இனி ஹீரோவாக தான் நடிப்பேன் என்கிற முடிவை எடுத்து அதிலும் பல ஹிட் படங்களை கொடுத்தார். இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் DD next level. வருகிற 16ம் தேதி இப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்திற்கான ப்ரோமோஷனில் சந்தானம் ஈடுபட்டுள்ளனர்.
சந்தானம் பேச்சு
சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், படத்தின் தயாரிப்பாளர் ஆர்யா மற்றும் நடிகர் சந்தானம் கலந்துகொண்டனர். அப்போது ஆர்யா குறித்து சந்தானம் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
"ஆர்யாவும் நானும் நண்பர்களா இருக்கும் போது சண்டை வராது. அவன் தயாரிப்பாளரா இருக்கும்போது, எங்களுக்குள்ள சில நேரங்களில் சண்டைகள் வரும். சில நேரங்களில் ஆர்யா கோபித்துக் கொள்வான். ரொம்ப சண்டை ஆயிடுச்சின்னா நான் கிளம்பி ஈஷா போயிடுவேன். உடனே எனக்கு போன் அடிச்சு சத்குரு கிட்ட காசு வாங்கி கொடு என்று கேட்பான். அவர்கிட்ட எப்படிடா காசு வாங்க முடியும் என்று கேட்டா, நீ அங்க தானே போற அவர்கிட்ட காசு வாங்கி கொடுத்துவிட்டு ப்ரொடியூசர் என்று அவர் பெயர் போட்டுக்கோ என்று சொல்வான்" என கூறியுள்ளார்.