'சிம்பு சார் இல்லனா, இன்னைக்கு நான் இல்ல'.. சிம்பு குறித்து பேசிய சந்தானம்
சந்தானம்
நடிகர் சந்தானம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நட்சத்திரங்கள் ஒருவர். மன்மதன் படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். இதன்பின் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து, தனது நகைச்சுவையால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம் ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறினார். அதன்பின் தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடித்து வரும் இவர், தற்போது சிம்புவின் 49வது படத்தில் மீண்டும் நகைச்சுவை நடிகராக களமிறங்கியுள்ளார்.
அடுத்ததாக சந்தானம் நடிப்பில் DD next level திரைப்படம் வெளிவரவிருக்கிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில் சிம்பு விருந்தினராக கலந்துகொண்டனர். அப்போது சிம்பு குறித்து சந்தானம் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சந்தானம் பேச்சு
அவர் கூறியதாவது "சிம்பு சார் இல்லனா, இன்னைக்கு நான் இல்ல அவருடைய காதல் அழிவதில்லை படத்துல நான் பின்னாடி நிற்கிற ஒருவனாக நடித்து இருப்பேன். அதுல என்னுடைய நடிப்பை கவனித்து எனக்கு மன்மதன் படத்தில் வாய்ப்பை கொடுத்தாரு.
அந்த படத்தோட முதல் நாள் படப்பிடிப்பில், 'உங்க இன்ட்ரோ சீன்ல பில்டப் வைக்கிறோம்', கண்டிப்பா மக்கள் கைதட்டுவாங்க என்று சொன்னாரு. அன்னைக்கு எனக்கு கைத்தட்டல் வரணும்னு பண்ணியவர் இன்னைக்கும் அதே விஷயத்தை பண்றாரு. ஒவ்வொரு நேரமும் எனக்காக மற்றவர்களிடம் சில விஷயங்கள் யோசிக்க சொல்லுவாரு. எப்போதுமே அவர் பின்னாடி நான் இருப்பேன்" என கூறியுள்ளார்.