மீண்டும் காமெடியனாக நடிக்க இத்தனை கோடி சம்பளமா? சந்தானத்தின் இந்த முடிவுக்கு என்ன காரணம்
சந்தானம்
தமிழ் சினிமாவில் காமெடியனாக தனது பயணத்தை துவங்கி, அதன்பின் ஹீரோவாக மாறியவர் சந்தானம். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த சில திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தேடி தரவில்லை.

இதையடுத்து கிக் எனும் திரைப்படத்தை கைவசம் வைத்துள்ள சந்தானம் அடுத்ததாக மீண்டும் காமெடியனாக நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் காமெடியனாக?
அதன்படி, அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் ஏகே 62 படத்தில் தான் சந்தானம் நடிக்க போவதாக கூறப்படுகிறது. ஆனால், இப்படத்தில் அவர் காமெடியனாக தான் நடிக்கிறாரா என்று இதுவரை உறுதியாக தெரியவில்லை.

இந்நிலையில், இப்படத்தில் நடிக்க ரூ. 10 கோடி சம்பளமாக சந்தானம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 17ம் தேதி முதல் துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
துணிவு படத்தை பார்த்த ஷாலினி, போனி கபூர், உதயநிதி ஸ்டாலின்.. ரிசல்ட் இதுதான்