தெலுங்கு ஹீரோ போல மாறிய நடிகர் சந்தானம்.. மாஸ் போட்டோ வைரல்

By Parthiban.A Jan 08, 2024 03:30 PM GMT
Report

நடிகர் சந்தானம் காமெடியனாக உச்சத்தில் இருந்த நேரத்தில் ஹீரோவாக நடிக்க முடிவெடுத்து அந்த ட்ராக்கில் மட்டும் தற்போது பயணித்து வருகிறார்.

அவர் நடித்த 80ஸ் பில்டப் படம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் வெளியாகி இருந்தது. அடுத்து வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

தெலுங்கு ஹீரோ போல மாறிய நடிகர் சந்தானம்.. மாஸ் போட்டோ வைரல் | Santhanam Vadakkupatti Ramasamy Photo

சந்தானம் லேட்டஸ்ட் போட்டோ

டிக்கிலோனா பட புகழ் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கி இருக்கும் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வரும் பிப்ரவரி 2ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

60கள், 70களில் நடப்பது போன்ற கதை என்பதால் சந்தானம் அதற்கான லுக்கில் இருக்கும் போட்டோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

போட்டோவை பார்த்ததும் தெலுங்கு ஹீரோ ரவிதேஜா என நினைத்துவிட்டோம் என ரசிகர்கள் கமெண்டில் பதிவிட்டு வருகிறார்கள்.  

தெலுங்கு ஹீரோ போல மாறிய நடிகர் சந்தானம்.. மாஸ் போட்டோ வைரல் | Santhanam Vadakkupatti Ramasamy Photo

தெலுங்கு ஹீரோ போல மாறிய நடிகர் சந்தானம்.. மாஸ் போட்டோ வைரல் | Santhanam Vadakkupatti Ramasamy Photo

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US