முதலாளி.. உதயநிதி பிறந்தநாளுக்கு அழகிய வாழ்த்து சொன்ன சந்தானம்!
உதயநிதி ஸ்டாலின்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் அரசியலில் வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். சினிமா, அரசியல் என இரண்டிலும் கலக்கியவர் கலைஞர் கருணாநிதி.
இவரின் பேரன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் தயாரிப்பாளராக களமிறங்கியவர் உதயநிதி. ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் விஜய், சூர்யா, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்திருந்தார்.
படங்கள் தயாரித்து வந்தவர் கடந்த 2012ம் ஆண்டு திரைக்கு வந்த ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அரசியல்-சினிமா என இரண்டிலும் தொடர்ந்து பயணிக்க முடியாது என முடிவு எடுத்து அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.

வாழ்த்து!
இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இவரது பிறந்தநாளைக்கு சினிமா நட்சத்திரங்கள், அரசியல் வாதிகள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சந்தானம் தனது எக்ஸ் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலினை டேக் செய்து, பிறந்த நாள் வாழ்த்துகள் முதலாளி, எதிர்வரும் ஆண்டு உங்களுக்கு சிறப்பான ஆண்டாக அமையட்டும் என்று பதிவிட்டுள்ளார்.
Pirantha Naal Vazthukal Dear Mudalali @Udhaystalin
— Santhanam (@iamsanthanam) November 27, 2025
Have an awesome year ahead 🤗