முதல் முறையாக பாண்டிராஜ் படத்திற்கு இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்.. யார் தெரியுமா
விஜய் சேதுபதி - பாண்டிராஜ்
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளிவந்தது. பெரிதும் எதிர்பார்ப்பில் இப்படம் வெளிவந்தாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.
இதன்பின் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் தீபா, சரவணன், ரோஷினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
முதல் முறையாக கூட்டணி
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்தது. விரைவில் திரையரங்கிற்கு வரவிருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இதற்கு முன் விஜய் சேதுபதியின் பல படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தாலும், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு இசையமைப்பது இதுவே முதல் முறையாகும்.
இதன்மூலம், பாண்டிராஜ் - சந்தோஷ் நாராயணன் கூட்டணி முதல் முறையாக இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் கூட்டணியில் இப்படத்தில் ஆல்பம் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

£4.75 மில்லியன் மதிப்புள்ள 18 காரட் தங்க கழிப்பறை: துணிகர திருட்டின் சிசிடிவி காட்சிகள்! News Lankasri

ட்ரம்ப் முன்வைத்த ஒப்பந்தத்துக்கு சம்மதித்தார் உக்ரைன் ஜனாதிபதி: விரைவில் கையெழுத்தாகலாம் News Lankasri

திருமணத்தில் குடிபோதையில் இருந்த மணமகன்.., மணப்பெண்ணிற்கு பதில் நண்பனுக்கு மாலை அணிவித்ததால் பரபரப்பு News Lankasri
