குக் வித் கோமாளியில் இன்றைய எலிமினேஷன் இவர்தான்! கண்ணீர் விட்ட போட்டியாளர்கள்
தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி மூன்றாம் சீசனில் இந்த வாரம் கண்டிப்பாக ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
குக் வித் கோமாளி 3
கடந்த முறை எலிமினேஷன் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது. அதனால் இந்த வாரம் ஒரு எலிமினேஷன் உறுதி என செஃப் வெங்கடேஷ் பட் சனிக்கிழமை எபிசோடில் கூறி இருந்தார்.
அதன்படி தற்போது எலிமினேஷன் டாஸ்க் நடைபெற்றது. அதில் அம்மு அபிராமி மற்றும் சந்தோஷ் ஆகியோர் தான் பங்கேற்றனர்.
சந்தோஷ் எலிமினேஷன்
சந்தோஷ் ஷக்ஷுகா என்ற ஒரு அரேபிய டிஷ் செய்து இருந்தார். அதை தட்டில் எடுத்து வைக்காமல், சமைத்த பாத்திரத்தில் அப்படியே கொண்டு சென்று நடுவர்களிடம் வைத்தார்.
அம்மு அபிராமி செர்ரி டோமேடோ கன்செமே என்ற டிஷ் செய்தார். அதை பார்த்து நடுவர்கள் பாராட்டினார்கள்.
ஆனால் சந்தோஷ் செய்த டிஷ்சில் சில குறைகள் கூறிய நடுவர்கள் இறுதியில் அவர் எலிமினேட் அவதாக அறிவித்தனர். அதை கேட்டு அம்மு ஆபிராம் உடனே கண்ணீர் விட தொடங்கிவிட்டார். தான் வெளியில் சென்று இருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பேன் என கூறினார்.
மேலும் ரோஷ்ணி, கிரேஸ் ஆகியோரும் கண்ணீர் விட்டனர்.