சினிமாவில் நுழைவதற்கு முன் 96 கிலோ, எடையை குறைக்க சாரா அலி கான் செய்த விஷயம்..
சாரா அலி கான்
பாலிவுட் நடிகர் சைப் அலி கானின் மகள் என்ற அடையாளத்தோடு மக்கள் மத்தியில் இடம்பெற்றவர் சாரா அலி கான்.
இவர் தற்போது ஹிந்தி சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். தனுஷ் ஜோடியாக அவர் அத்ராங்கி ரே என்ற படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
எப்படி தெரியுமா?
இந்நிலையில், பாலிவுட் சினிமாவில் நுழைவதற்கு முன் 96 கிலோ இருந்த உடல் எடையை தற்போது 51 கிலோவாக மாற்றியதற்கு பின்னணியில் அவர் எதிர்கொண்ட கடுமையான சவால்கள் குறித்து பகிர்ந்திருக்கிறார்.
அதில், " நான் (PCOS) பிரச்சனையை எதிர்கொண்டேன். இதனால், சர்க்கரை இல்லை, பால் இல்லை, கார்போஹைட்ரேட் இல்லை மிகவும் கடினமான உணவுமுறையை நான் பின்பற்றினேன்.
இதில், டயட் மட்டுமல்லாமல், தீவிரமான உடற்பயிற்சியும் முக்கிய பங்கு வகித்தது. சைக்கிள் ஓட்டுதல், யோகா, நடனம் என இவை அனைத்துமே என் உடல் எடையை குறைக்க உதவியது" என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சிறந்த டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள்: உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்கூட்டரை தேர்ந்தெடுப்பது எப்படி? News Lankasri

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
