உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ
சூப்பர் சிங்கர்
சூப்பர் சிங்கர், விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் ஒரு ரியாலிட்டி ஷோ.
வருடா வருடம் புத்தம் புதிய சீசன்கள் ஒளிபரப்பாகி வர இந்த வருடம் சீனியர்களுக்கான 11வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. 11வது சீசன் புத்தம் புதிய கான்செப்டுடன் ஒளிபரப்பாகிறது, கடந்த வாரம் அம்மா ஸ்பெஷல் பாடல்களாக ஒளிபரப்பாகி வந்தது.
அதில் எல்லா போட்டியாளர்களும் ஒரு எமோஷ்னல் பாடல் பாடி தங்களின் அம்மாவை சந்தோஷப்படுத்தி வந்தார்கள்.
சரண் ராஜா
இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இளையராஜா போலவே பாடல்கள் பாடி அசத்தி வருபவர் சரண் ராஜா.
இவர் அம்மாவிற்கான பாடல் பாடிவிட்டு அவர் செய்த சாதனையை கூற அரங்கமே இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். என் அப்பாவிற்கு நான் தமிழ் பேராசிரியர் ஆக வேண்டும் என்பது ஆசை.
பாடல்களை பாடுவதை தாண்டி நான் எப்போதும் புத்தகங்கள் படித்துக்கொண்டு இருப்பேன். அப்படி நான் எழுதிய ஒரு கவிதை தொகுப்பு உலக சாதனை செய்தது.
கிட்டத்தட்ட ஒரு 12 விருதுகள் வாங்கியுள்ளேன் என கூற அரங்கமே இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.