பாதியிலே நின்ற சீரியல், அதே நாயகிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை தந்த விஜய் டிவி !
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த வைதேகி காத்திருந்தாள் இதில் ப்ரஜின் மற்றும் சரண்யா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர்.
ப்ரஜினுக்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து விலகிக்கொண்டார், அவருக்கு பதிலாக முன்னா என்பவர் அவரின் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
பின் அந்த தொடர் 39 எபிசோட்டுகள் மட்டும் ஒளிபரப்பாகிய நிலையில் பாதியிலே நிறுத்தப்பட்டது. இது ரசிகர்களுக்கு மட்டுமில்லை அந்த சீரியலில் கமிட் ஆன எல்லா நடிகர், நடிகைகளுக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது.
மேலும் அந்த சீரியல் நாயகியான சரண்யா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருத்தத்துடன் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். ஏற்கனவே இதேபோல் சரண்யா விஜய் டிவி-யில் நடித்து வந்த ஒரு பாதியிலே நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது சரண்யா மீண்டும் விஜய் டிவி சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார். நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் சரண்யா எண்ட்ரி கொடுக்க இருப்பதாகவும் அதில் அவர் போலீஸ் ரோலில் நடித்தப்பாக பல தகவல்கள் பரவி வருகின்றன.
சரண்யா போலீஸ் உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்திலும் பகிர்ந்து இருக்கிறார். இதோ அந்த புகைப்படம்.