அப்போ நானும் உச்ச நட்சத்திரம் தான்.. விஜய் பற்றிய கேள்விக்கு சரத்குமார் கூறிய பதில்
நடிகர் விஜய் அரசியல் பிரச்சாரத்திற்காக தற்போது நேரடியாக பல ஊர்களுக்கு செல்ல தொடங்கி இருக்கிறார். அவர் செல்லும் அணைத்து இடங்களிலும் பெரிய அளவில் மக்கள் கூட்டம் அவரை பார்க்க வருகிறது.
அது பற்றி தற்போது ஒட்டுமொத்த அரசியல் வட்டாரமும் பேசிக்கொண்டிருந்தது. அவருக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா என பலரும் கேட்டு வருகிறார்கள். அது பற்றி கேட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் 'நோ கமெண்ட்ஸ்' என பதில் கூறிவிட்டார்.
1996ல் எனக்கு கூடாத கூட்டமா..
மேலும் நடிகர் சரத்குமாரிடம் அது பற்றி கேட்டபோது "எனக்கும் தான் 1996ல் மதுரையில் பெரிய கூட்டம் கூடியது. நானும் உச்ச நட்சத்திரமாக இருக்கும்போது தான் அரசியலுக்கு வந்தேன்."
"நாட்டாமை, சூர்யவம்சம் போன்ற படங்கள் கொடுத்துவிட்டு தான் அரசியலுக்குள் வந்தேன். பிரபலம் என்றால் கூட்டம் வரத்தான் செய்யும்" என கூறி இருக்கிறார்.

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
