விஜயகாந்த் மறைவிற்கு வடிவேலு வராததற்கு இதுவும் ஒரு காரணமா?.. பிரபலம் சொன்ன விஷயம்
விஜயகாந்த்
விஜயகாந்த், கேப்டன் விஜயகாந்தாக மக்கள் மனதில் என்றும் நிலைத்து இருப்பவர்.
சினிமாவில் தனது படங்கள் மூலம் நிறைய நல்ல விஷங்களை சொல்லி தனக்கென ஒரு தனி வழியில் பயணித்தார். சினிமாவை தாண்டி நிறைய பேருக்கு உதவிகள் செய்து வள்ளலாக இருந்தார்.
அரசியல் வந்து மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த களத்தில் வந்தவர், வந்த வேகத்திலேயே எதிர்க்கட்சி என்ற அங்கீகாரம் பெறும் அளவிற்கு வளர்ந்தார்.
ஆனால் உடல்நிலை அவருக்கு கைகொடுக்கவில்லை, இப்போது நம்முடனும் இல்லை.
சரத்குமார்
விஜய்காந்த் மறைவிற்கு நடிகர் வடிவேலு வராதது பெரிய விஷயமாக பேசப்பட்டது. இதுகுறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் சரத்குமார் பேசும்போது, சில நேரங்களில் எல்லோரும் தவறு செய்வோம், நான் வடிவேலுவுக்கு சப்போர்ட் செய்யவில்லை.
ஆனால் அவர்கள் இரண்டு பேருக்குள்ளும் கார் பார்க்கிங்கை வைத்து சிறிய பிரச்னைதான் வந்தது. அந்தப் பிரச்னையில் நீ பெரிய ஆளா இல்லை நான் பெரிய ஆளா என்ற ஈகோ வந்திருக்கலாம்.
பிறகு அரசியலிலும் விஜயகாந்த்துக்கு எதிராக பேச வேண்டிய சூழல் அமைந்துவிட்டது.
விஜயகாந்த் மறைவிற்கு உண்மையில் வடிவேலு போக வேண்டும் என நினைத்திருக்கலாம், ஆனால் அங்கு சென்றால் வேறு மாதிரி எதுவும் நடந்துவிடுமோ என்று எண்ணி வீட்டுக்குள் உட்கார்ந்து அழுதிருக்கலாம் என கூறியுள்ளார்.

’ஊர்ந்து’ உறுத்தியிருந்தா ’தவழ்ந்து’-னு மாத்திக்கலாம் - அதிமுகவுக்கு ஸ்டாலின் நக்கல் பதிலடி IBC Tamilnadu

பிரம்மபுத்திரா நதி இந்தியாவிற்குள் பாய்வதை சீனா நிறுத்த வேண்டும்! பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை News Lankasri
