டான்ஸ் ஜோடி டான்ஸ் பஞ்சமி வீட்டிற்கு சென்ற சரத்குமார்! வைரலாகும் புகைப்படங்கள்
ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொணட பஞ்சமிக்கு அந்த ஷோ நடுவராக இருக்கும் நடிகை வரலக்ஷ்மி பல்வேறு உதவிகள் செய்து இருக்கிறார். அவரது குழந்தைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கூட வரலக்ஷ்மி தான் கட்டியதாக பஞ்சமி நன்றி கூறி இருந்தார்.
மேலும் சரத்குமார் வீட்டுக்கும் பஞ்சமி குடும்பத்துடன் சென்று இருந்தார். இந்நிலையில் தற்போது சரத்குமார் பஞ்சமியில் வீட்டுக்கு சென்று இருக்கிறார். அந்த போட்டோக்கள் வைரல் ஆகி இருக்கிறது.
பஞ்சமி வீட்டில் சரத்குமார்
இது பற்றி சரத்குமார் பதிவிட்டு இருப்பதாவது..
"Dance Jodi Dance Reloaded 3 நடன போட்டியாளராக கலந்து கொண்ட திருமதி.பஞ்சமி நாயகி அவர்களை குடும்பத்தாருடன் சென்னையில் எனது இல்லத்திற்கு அழைத்து விருந்தோம்பல் செய்ததை தொடர்ந்து, அவர் கள்ளக்குறிச்சியில் தனது இல்லத்திற்கு வருகை தரும்படி கேட்டுக்கொண்டார்."
"அதன்படி, காலை குதிரைச்சந்தல், முத்தையா நகரில் அமைந்திருக்கும் திருமதி.பஞ்சமிநாயகி - திரு.மணிகண்டன் அவர்களின் இல்லத்திற்கு சென்று காலை சிற்றுண்டி அருந்தி, அந்த பகுதி வாழ் மக்களை சந்தித்து அன்பை பகிர்ந்து கொண்டேன்."




