உடல் தேவை என்பது சிறிய பங்கு தான்.. விவாகரத்து குறித்து எமோஷனலாக பேசிய சரத்குமாரின் முதல் மனைவி
சரத்குமார்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் சரத்குமார். இவர் 1984 ஆம் ஆண்டு சாயாதேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு பிறந்த மகள் தான் வரலட்சுமி சரத்குமார்.
சில தனிப்பட்ட காரணத்தால் சரத்குமார் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின் சரத்குமார், பிரபல நடிகை ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.
திருமணம்!!
இந்நிலையில் பேட்டி ஒன்றில் சரத்குமாரின் முதல் மனைவி சாயா விவாகரத்து குறித்து எமோஷனலாக பேசியுள்ளார். அதில் அவர் பேசுகையில், " திருமணம் செய்து கொள்வதற்கு இதுதான் வயது என்று எதையும் நாம் குறிப்பிட்டு சொல்ல முடியாது. திருமணம் செய்வதற்கு மனதளவில் சரியாக இருக்க வேண்டும். ஆனால் சிலர் தவறான காரணத்திற்காக திருமணம் செய்துகொள்கிறார்கள்".
"திருமணம் என்பது ஒரு நாள் கூத்து கிடையாது. திருமணம் என்பது ஒரு பயணம் அதில் நீங்கள் சரியாக பயணிக்க வேண்டும் என்றால் அனைத்து தளங்களிலும் கொஞ்சம் உயர்ந்த நிலையை அடைந்திருக்க வேண்டும்".
"சிலர் உடல் தேவைக்காக திருமணம் செய்துகொள்கிறார்கள். அதெல்லாம் உண்மையான திருமணமே கிடையாது. நீங்கள் தவறான காரணத்தால் செய்தால் அது கடைசியில் விவாகரத்தில் முடிய நிறைய வாய்ப்பு இருக்கிறது" என்று சாயா கூறியுள்ளார்.
You May Like This Video