பத்திரிகையாளர் கேள்விக்கு கோபம் அடைந்த சரத்குமார்.. வாரிசு பிரஸ் மீட்டில் சலசலப்பு
வாரிசு
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் 11 -ம் தேதி வெளியாகி மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. இப்படத்தில் சரத்குமார், ஜெயசுதா, ஷாம், ரஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.
இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளதாக பலரும் விமர்சனம் செய்தனர். வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு படம் வெளியாவதற்கு முன், "விஜய் தான் தமிழ் நாட்டின் நம்பர் 1" என்று கூறியிருந்தார். இதனால் பெரும் சர்ச்சை கிளம்பியது.

சூப்பர் ஸ்டார்
இதைதொடர்ந்து வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சரத்குமார், " சூரியவம்சம் படத்தின் வெற்றி விழாவின் போது நான் விஜய் தான் தமிழ் நாட்டின் அடுத்து சூப்பர்ஸ்டார் என்று சொன்னேன். அது நிறைவேறிவிட்டது" என்று கூறினார். இதற்கு பலரும் பல வித கருத்துக்களை முன்வைத்தனர்.
இந்நிலையில் வாரிசு படத்தின் வெற்றி விழாவில் பத்திரிக்கையாளர் சரத்குமாரிடம், ' ரஜினிகாந்த் இருக்கும் போதே ஏன் விஜய்க்கு சூப்பர்ஸ்டார் பட்டம் கொடுத்தீர்கள் என்று கேள்வி கேட்டனர்.
இதற்கு சரத்குமார், " நாட்டில் எத்தனைப் பிரச்சனைகள் இருக்கிறது, உங்களுக்கு இது மட்டும் தான் தெரிகிறதா? நான் விஜய் சூப்பர்ஸ்டார் தான் என்று சொன்னேன், cm ஆவர், பிரதமர் ஆவார் என்று சொல்லவில்லை. என்ன பெரிய சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார்" என்று கோபத்துடன் பதில் சொன்னார்.

ஆள் அடையாளம் தெரியாமல் போன சந்தானம்.. எப்படி இருக்கிறார் என்று பாருங்க
நம் முன்னேற்றத்தை தடுக்க விரும்புகிறார்கள்; அதற்கு தடைவிதிக்கப்போவதில்லை - ட்ரம்ப் திட்டவட்டம் News Lankasri