சரத்குமார் நடித்த நாட்டாமை படத்திற்கு முதலில் என்னை தான் அணுகினார்கள்.. ரகசியத்தை உடைத்த நடிகர்
நாட்டாமை
தமிழ் சினிமா நட்சத்திரங்கள், சில குறிப்பிட்ட படங்களில் நடிக்க மறுத்து பிறகு அந்த படம் வெற்றி அடைந்த பின் அதற்காக வருத்தப்படுவதும் காலங்காலமாக நடக்கும் ஒரு விஷயம் தான்.
அந்த வகையில், தமிழ் திரைப்பட நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் அவர் நடித்த நீ வருவாய் என படத்தின் 25வது கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
தெரியாத தகவல்
அதில், குறிப்பாக ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த நாட்டாமை படத்தில் முதலில் நடிக்க பார்த்திபனை தான் ரவிக்குமார் அணுகினாராம்.
ஆனால், இந்த கதை அவருக்கு ஒத்துப்போகும் கதாபாத்திரத்தில் இல்லை என்பதால் பார்த்திபன் அந்த ரோலில் நடிக்க மறுத்துவிட்டதாகவும்.
பிறகு, அந்த கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்ததாகவும் அந்த பேட்டியில் தெரிவித்தார்.
நாட்டாமை படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி அடைந்து சரத்குமாரின் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri
