பிக்பாஸில் சில மணிநேரம் மட்டுமே வந்து சென்ற நடிகர் சரத்குமாருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?
பிக்பாஸ் 5து சீசனில் இப்போது போட்டியாளர்களுக்கான ஒரு முக்கியமான டாஸ்க் நடக்கிறது.
அதாவது பைனலில் ஒரே ஒரு நபர் தான் ஜெயிக்க போகிறார், யார் என்பது நமக்கு தெரியாது. அந்த பைனலுக்கு முன் பிக்பாஸ் ஒரு குறிப்பிட்ட பண தொகையை வைத்து இதை யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறலாம் என்பார்.
முதலில் 3 லட்சம் வைத்தார், இப்போது ரூ. 7 லட்சம் வரை பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுத்துள்ளார்.
அந்த பெரிய பண தொகையை யாராவது எடுப்பார்களா அல்லது பிக்பாஸே அந்த பணத்தை திரும்ப எடுத்துக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த நிகழ்ச்சியில் ரூ. 3 லட்ச பெட்டியுடன் பிக்பாஸில் வந்திருந்தார் நடிகர் சரத்குமார்.
சில மணி நேரம் மட்டுமே வந்த சரத்குமாருக்கு சம்பளமாக ரூ. 10 லட்சம் பேசப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.