பிரதீப் கால்ல விழுந்து அழுது இருக்கீங்க, அது எப்படி.. நடிகர் சரத்குமார் ஓபன் டாக்
Dude
2025ஆம் ஆண்டு மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படங்களில் இன்று Dude. அதே போல் அதிகளவில் சர்ச்சைக்குள்ளான படமும் இதுவே ஆகும்.

அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத்குமார், ரோகிணி ஆகியோர் நடித்திருந்தனர். சாய் அப்யங்கர் இசையமைத்திருந்தார். இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்த இப்படத்தில் சரத்குமாரின் கதாபாத்திரத்திற்கு தனி கவனம் கிடைத்தது.
சரத்குமார் ஓபன் டாக்
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் Dude படத்தை பார்த்துவிட்டு நடிகை தேவயானி தன்னிடம் பேசியது குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, "Dude படத்தை பார்த்துவிட்டு தேவயானி எனக்கு போன் பண்ணி ரொம்ப நல்ல பண்ணி இருந்தீங்கனு சொன்னாங்க. ஆனா பிரதீப் கால்ல விழுந்து அழுது இருக்கீங்க, அத எப்படி பண்ணீங்கனு கேட்டாங்க. நான் ஒன்னும் பிரதீப் கால்ல விழுந்து அழல, என் தங்கச்சி பையன் கால்ல தான் விழுந்தேன். இன்னிக்கி தான் பிரதீப் நடிச்சுட்டு இருக்கார், ஆனா ஒரு கேரக்டரா அவர் கால்ல விழுந்து அழுறதுல என்ன தப்பு" என கூறியுள்ளார்.
திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் - கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் IBC Tamilnadu
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri