ரசிகர்களுக்கு வருத்தமாகத்தான் இருக்கும்.. விஜய் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகர் சரத்குமார்
கடைசி படம்
நடிகர் விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் வருகிற 2026 ஜனவரி 9ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தை திரையில் பார்த்து கொண்டாட ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

அரசியலில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக சினிமாவிலிருந்து விலகும் முடிவை விஜய் எடுத்துள்ளார்.
சரத்குமார்
விஜய் சினிமாவை விட்டு போவது குறித்து திரையுலகினர் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பிரபல நடிகர் சரத்குமார் இதுகுறித்து பேசியுள்ளார்.
”நடிகர் விஜய் சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே அதை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார். ஜனநாயகம் படத்திற்கு பின் நடிக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார். இது கண்டிப்பாக அவரது ரசிகர்களுக்கு வருத்தமாகத்தான் இருக்கும்” என அவர் கூறியுள்ளார்.

விஜய் சினிமாவிலிருந்து விலகியுள்ளது குறித்து சரத்குமார் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.