விஜய் போல தான் நானும்.. நேரடியாக தாக்கி பேசிய நடிகர் சரத்குமார்
நடிகர் விஜய் கோலிவுட்டில் உச்ச நடிகராக இருந்து வருகிறார். ஒரு படத்திற்கு 200 கோடி ரூபாய் சம்பளமாக பெறும் அளவுக்கு அவர் இருக்கிறார்.
இருப்பினும் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்துவிட்டார். சமீபத்தில் தனது கட்சி மாநாட்டில் பேசிய விஜய் 'என் கெரியரின் உச்சத்தை.. அந்த சம்பளத்தை.. உதறிவிட்டு வந்திருக்கிறேன்' என விஜய் கூறினார்.

நானும் அப்படி தான் வந்தேன்..
இந்நிலையில் விஜய் பற்றி நடிகர் சரத்குமார் விமர்சித்து பேட்டி கொடுத்து இருக்கிறார். நானும் கெரியரின் உச்சத்தில் தான் அரசியலுக்கு வந்தேன் என அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே தனது கட்சியை பாஜக உடன் இணைத்துவிட்ட சரத்குமார் விஜய்யை தாக்கியும் பேசி இருக்கிறார். விஜய் வீட்டில் எல்லோரும் ஹிந்தி பேசுகிறார்கள், ஆனால் அவர் ஹிந்தியை எதிர்க்கிறார். அவருக்கு நீட், மொழி கொள்கை பற்றி எல்லாம் புரிதல் இல்லை என சரத்குமார் விமர்சித்து உள்ளார்.

மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri