நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி சாயா சிங் ஒரு படத்தில் நடிக்கிறாரா?- யாருடைய படம் தெரியுமா?
சரத்குமார்
தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமாக பார்க்கப்படும் நடிகர்களில் ஒருவர் சரத்குமார்.
நாயகனாக நடித்து வந்தவர் இப்போது துணை கதாபாத்திரங்களில் டாப் நடிகர்களின் படங்களின் நடித்து வருகிறார். இவர் கடந்த 1984ம் ஆண்டு சாயா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் மகள் வரலட்சுமி சரத்குமார் சினிமாவில் நாயகியாக நடித்து வருகிறார். சரத்குமார் மற்றும் சாயா சிங் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2000ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
பின் 2001ம் ஆண்டு நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார்.
புதிய படம்
இந்த நிலையில் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துவரும் வணங்கான் என்ற திரைப்படத்தில் சாயாசிங் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் அவருடைய கேரக்டர் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri
