சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவண அருளின் பிரம்மிக்க வைக்கும் பிரம்மாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ
சரவண ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவண அருள் தனது தந்தை இறப்பிற்கு பிறகு கேமரா பக்கம் வந்துள்ளார். தனது கடை விளம்பரத்தில் முன்னணி நடிகைகளை வைத்து நடிப்பது, The Legend என்ற பிரம்மாண்ட படத்தில் நடிப்பது என படு பிஸியாக இருக்கிறார்.
அண்மையில் The Legend படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா முன்னணி நடிகைகள் இடம்பெற படு பிரம்மாண்டமாக நடந்தது, அனைவரும் வாய் அடைத்து பார்க்கும் அளவிற்கு நிகழ்ச்சி இருந்தது.
சரவண அருளுக்கு ஒரு மகள் இருக்கிறார், அவரது திருமணம் எப்படியெல்லாம் நடந்தது என்பதை நாங்கள் சொல்வே தேவையில்லை, எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.
சரவண அருள் பிரம்மாண்ட வீடு
சரவண அருள் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் குறும்பூர் என்ற இடத்திற்கு உள்ளே ஒரு பிரம்மாண்ட வீட்டை அதாவது அவரது சொந்த கோயில் உள்ள இடத்தில் கட்டியுள்ளார்.
எப்போதும் வாழப்போகும் இடம் இல்லை, அப்பப்போ கோவிலுக்கு சென்றால் தங்கிக் கொள்ளும் படி ஒரு பிரம்மாண்ட வீட்டை கட்டியுள்ளார். பிரம்மாண்டம் என்பதற்கு அந்த வீட்டை உதாரணமாக கூறலாம், அனைத்தையும் உயர்தர கண்ணாடிகள், கிரானைட், உயர்தர சோபா செட், பெட் என வைத்துள்ளார்.
இதோ அவரது வீட்டின் சில புகைப்படங்கள்,




